Top News

3 தடுப்பூசிகளையும் பெற்றால் மட்டுமே அனுமதி




பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும். அதற்கமைய 3 தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.

இது தொடர்பில் எங்களுக்கு கடிதம் மூலம் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சுற்றரிக்கை வெளியிட்டு எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்கள்.

அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் பொதுப் போக்குவரத்தில் தடுப்பூசி அட்டையை சேகரிக்க ஆலோசனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post