ஒரே நாளில் இலங்கையில் தங்கத்தின் விலை 4,000 ரூபாவினால் அதிகரிப்பு
February 25, 2022
0
யுக்ரைன் போர் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே நாளில், 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதென அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில், 1,871 டொலரில் இருந்து 1,974 டொலராக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இலங்கையில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதென அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
Share to other apps