நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள், தற்போதைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை அடுத்த வார அமைச்சரவையில் தான் அறிவிக்கப்போவதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணங்களை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 45 பேரின் விவரங்கள் வெளியாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தேசிய நீர்வழங்கள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது என்றார்.
Post a Comment