Top News

48 மணித்தியாலத்துக்கு மேல் காய்ச்சல் இருந்தால்?



ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதைக் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், 48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மற்றும் டெங்கு ஆகியவை வேகமாக அதிகரித்து வருவதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அதுதவிர, தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று மக்கள் தங்கள் சொந்த முடிவுக்கு வரக்கூடாது என்றும் 48 மணித்தியாலத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post