( அஸ்ஹர் இப்றாஹிம்)
மருதூர் மெய்வல்லுனர் நட்சத்திர கழகம் ஒழுங்கு
செய்திருந்த கல்முனை ஸரஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரும் உலக சாதனை வீர்ருமான எம்.எஸ்.எம.பர்ஸான் அவர்களின் ஐம்புலங்களால் புரியப்பட்ட சாதனைகளை பதியும் உலக சாதனையாளர்களை சோழன் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக சோழன் அமைப்பின் இலங்கைப்பிரதிநிதிகளுக்கு முன்னிலையில் இடம்பெற்ற சாகச நிகழ்வுகள் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் முன்னிலையில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 26 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக கண்டு களித்த இச்சாதனையாளரின் சாகச நிகழ்வுகளை கல்முனைப் பிரதேச மக்களும் நேரடியாக பார்வையிட்டனர்.
காதினால் பலூனை ஊதி உடைத்தல் , கண்களினால் இரும்பு கம்பியினை வளைத்தல் , பல்லினால் 5.7 கிலோ கிறாம் பாரத்தினை சங்கிலிகளின் உதவியுடன் உயர்த்துதல். குளிர்பானத்தை முக்குத்துவாரத்தினூடாக அருந்துதல் , மூக்கு துவாரத்தினூடாக வயரை செலுத்தி வாயினூடாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல். போன்ற 20 நிமிடத்தில் புரிய வேண்டிய செயற்பாடுகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி உலக சாதனையை புரிந்து உலக சாதனையை பதியும் சோழன் பத்தகத்தில் தனது சாதனையில் தனது பெயரை பதிவிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இவரின் சாதனையை பதிவதற்காக இலங்கைப் பிரதிநிதிகளான எம்.தனராஜன் , ரீ.இன்பராஜா , எஸ்.நிலக்ஸன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் சர்வமத பெரியார்களான ரண்முத்துகல சங்கரெத்ன தேர்ர் , சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் , அஸ்ஸெய்க் அஸ்றப் மௌலவி , பாஸ்டர் கிருபை ராஜா ஆகியோரும் கல்முனை மாநகர முதல்வர் கௌரவ ஏ.எம்.றகீப் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்..புவநேந்திரன் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் , கல்முனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் , சாய்ந்தமருது பிரதேச உதவி பிரதேச செயலாளர் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் ஏ.ஸி.எம்..பளீல் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன் , கிழக்கு மாகாண கராட்டி சம்மேளன தலைவர் முஹம்மட் இக்பால் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Post a Comment