இந்த நாட்டு குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வயதெல்லை எதிர்காலத்தில் மாறலாம் என குழந்தை நல மருத்துவர் பி.ஜே. சி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்த அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும், மற்றொரு நபருக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment