மொஹொமட் ஆஸிக்
வத்துகாமம் - எல்கடுவ வீதியில் லொறி ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
நேற்று (12) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வத்துகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வத்துகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment