Top News

உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல்.

ரஷ்யாவுக்கு எதிரான போர்ச்சூழலில் உக்ரைனுக்கு 600

 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்று 3ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று முனைகளிலும் ரஷ்யா ஆக்ரோஷத் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.


முன்னதாக, உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில், உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இது இலங்கை மதிப்பில் ரூ. 14,000 கோடி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


இதில், இராணுவ உதவிக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்து.

Post a Comment

Previous Post Next Post