ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களில் அரசாங்கம் ஒருபோதும் அரசியல் ரீதியாக தலையிடாது எனவும், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை ஊடாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடைமுறை செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
நாட்டில் ஊடக அடக்குமுறை இல்லை என்பது, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஊடாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் விமர்சனங்களின் ஊடாக தெளிவாகத் தெரிகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின்10 சதவீதமான நல்ல விடயங்களை கூறினால் எஞ்சிய 90 சவீதம் விமர்சனங்களே முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment