Top News

நாடு முடக்கப்படுமா ?



நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அரசாங்கம் தயார் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாடு தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தேவை கிடையாது என அவர் கூறுகின்றார்.

எனினும், சுகாதார வழிகாட்டிகளை பின்பற்றுதல் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் ஊடாகவே கொவிட் – 19 சவாலை வெற்றி கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்குள் செல்ல எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி முதல் தடை விதிக்க வகையிலான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post