Top News

விமல், கம்மன்பிலக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நடக்கும் செயற்பாடுகள் நன்றி கெட்ட செயல் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்


ராஜபக்ச குடும்பத்தில் நன்றியை மறக்காத ஒரே நபர் மகிந்த ராஜபக்ச எனவும் பசில் ராஜபக்ச செய் நன்றி மறந்தவர் என்பதால், அவரை பற்றி பேசுவதற்கு கூட விரும்பவில்லை என நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.



இணையத்தள தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன் நின்று செயற்பட்ட விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நடக்கும் செயற்பாடுகள் நன்றி கெட்ட செயல்.

இவர்களை அரசாங்கத்தில் இருந்து நீக்கினால். அரசாங்கத்தின் பயணமும் முடிவுக்கு வந்து விடும்.

அதேபோல தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சமன் ரத்னபிரிய,தான் தலைவராக பதவி வகிக்கும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தில் இருந்து நீக்கிய நபர். சமன் ரத்னபிரிய பாம்பை போன்றவர் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post