Top News

சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா சர்ச்சை - ஹக்கீம் நேரில் சந்தித்து பேச்சு


திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா சர்ச்சையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் இன்று (09) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட ஆசிரியை நீதிமன்றத்தை நாடிய போது மீண்டும் அதே பாடசாலைக்கு பணியமர்த்தியமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய நிலவரம் , மாகாண கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இது தொடர்பில் தொலைபேசி ஊடாக மாகாண கல்விப்பணிப்பாளருடன் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post