ரஷ்யா -உக்ரைன் போர் நெருக்கடி குறித்த இலங்கையின் அறிக்கை

ADMIN
0





உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.




இலங்கை வெளிநாட்டு அமைச்சு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.




பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம் என இலங்கை வலியுறுத்துகின்றது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top