Top News

விமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு




அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, 75 மில்லியன் ரூபாய் சொத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று காலை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு மீதான விசாரணை ஜூன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி சுகயீனம் காரணமாக இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனவும் அதனால் விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முறைப்பாட்டாளரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சாட்சிகளை எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2010 – 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் வீரவன்ச, 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வருமானம் மற்றும் சொத்துக்கள் சேர்த்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அமைச்சர் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post