மியன்மார் இராணுவ ஆட்சி மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீடிப்பு
February 23, 2022
0
ஐரோப்பிய ஒன்றியம் மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை நீட்டித்துள்ளது.
நாட்டில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.
மேலும் 22 அதிகாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ரொஹிங்கிய இனத்தினர் மீதான வன்செயல் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் நடப்பிலுள்ள விசாரணையை இன்னும் துரிதப்படுத்தும் விதத்தில் தடையுத்தரவுகள் அமைந்துள்ளன.
அந்தக் குற்றச்சாட்டுகளை மியன்மாரின் ,ராணுவ அரசாங்கம் மறுத்து வருகிறது. விசாரணையைத் தள்ளுபடி செய்ய இராணுவ அரசாங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.
ரொஹிங்கிய இன ஆர்வலர்கள் விசாரணை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
Share to other apps