தோப்பூரிலிருந்து கொழும்பிற்கு செல்லும் வழியில் பாரிய வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் செய்யது லெப்பை அப்துர் றஸ்ஸாக் ஹாஜியார் மற்றும் அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த செய்யது லெப்பை அப்துர் றஸ்ஸாக் ஹாஜியார் மற்றும் அவரது மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் அவரின் இரு பிள்ளைகளும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரஸ்ஸாக் ஹாஜி மற்றும் அவரது மனைவிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த விடையம் தொடர்பாக கௌரவ தலைவர் ரிஷாத் பதியுதீன் , தவிசாளர் அமீர் அலி ஆகியோர் குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூடிய அவதானம் செலுத்துமாறு வேண்டியதை முன்னிட்டு வைத்தியசாலைக்கு விரைந்த மாநகரசபை உருப்பினர் வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொண்டு நோயாளர்கள் தொடர்பாக கூடிய கரிசனை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் துரித நடவடிக்கைகள் வைத்தியசாலை சார்பில் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் அவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதால் நோயாளர்களின் நலன் கருதி அவர்களை பார்க்க வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும், புகைப்படங்கள் எவற்றையும் எடுக்க வேண்டாம் என்பதையும் வைத்தியசாலை வட்டாரத்தில் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment