வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் மற்றைய சந்தேகநபர் 38 வயதுடையவர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பரீட்சை மத்திய நிலையத்திலேயே, குறித்த மூவரும் பரீட்சைக்கு தோற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment