Top News

தயவு செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த கருத்துக்கள்.



இன்று நம் நாடு கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. நாட்டை ஆள முடியாத ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளது.நிர்வாக நடவடிக்கைகள் தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒருபுறம், பணம் செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்யவும், நாட்டில் சந்தையில் பொருட்கள் இல்லை.நாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைக் கூட வாங்க முடியாது. எரிபொருள் இல்லை, ஒருபுறம் மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் கூறுகிறார். மறுபுறம் தினமும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி இன்று மருந்து கிடைக்காமல் மக்கள் செத்து மடிகின்றனர். இன்று கொழும்பு துறைமுகத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் உள்ளன.இதில் அரிசி, பருப்பு,சீனி மற்றும் பால் மா உள்ளன. பல மாதங்களாக துறைமுகத்திற்குள் நுழைய முடியவில்லை. அரசாங்கம் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்து 47 வருடங்களின் பின்னர் அதாவது 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நாட்டில் வரிசை யுகம் ஒன்று உதயமாகியுள்ளது. பால் மா வரிசை, எரிவாயு வரிசை, அரிசி, தேங்காய், சீனி வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் கட்டியெழுப்பிய நாட்டை 45 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அழிந்து விட்டுள்ளது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பொருட்கள் இல்லை. குறைந்தபட்சம் 30% மக்களுக்கும் மின்சாரம் கிடைக்காத காலம். வாகனம் எதுவும் இல்லை.சைக்கலில் பழைய டயரை எடுத்துவிட்டு புதிய டயரை எடுத்தது நினைவுக்கு வருகிறது.எமது கட்சியால் நாட்டை அபிவிருத்தியின் புதிய யுகத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.அந்த கிராமத்து மனிதருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று வாங்கும் வாய்ப்பு எமது ஆட்சியில் கிடைத்தது.ஜப்பானிய வாகனம் வைத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்தோம். இன்று இந்த நாடு, கடந்த இரண்டு வருடங்களாக வாகனம் கொண்டு வர வழியில்லாமல் வக்குரோத்தாகி விட்டது.

குழந்தைக்கு கம்ப்யூட்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பெற முடியவில்லை.மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற முடியவில்லை,மின்சாரம் பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.




இன்று மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் நாள் உணவோ மருந்தோ இன்றி இறக்க நேரிடும்.புற்றுநோய் மருத்துவமனையில் ஏற்கனவே புற்றுநோய்க்குரிய மருந்து இல்லை.அரச மருத்துவமனைக்குச் சென்றால்,தனியார் மருந்தகங்களுக்கு எழுதி கொடுக்கின்றனர்.மருத்துவர் கொடுக்கும் மருந்தை வாங்க மருந்துகள் இல்லை.நாட்டின் நிதி நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட இவை அனைத்தும் அவர்களின் கூட்டாளிகளுக்கு நிம்மதியைக் கொடுத்தன. அதன் மூலம் கோடிக்கணக்கில் இழப்பு அரசுக்கு ஏற்பட்டது.இன்னொரு நண்பருக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம்.இந்த தகவல் நம் முன் தெரியவரும். இந்நாட்டில் பொருட்களின் விலைகள் இன்று கட்டுப்பாட்டில் இல்லை. அரசாங்கம் நாட்டை ஆளவில்லை.ஐ ஓ சி நேற்று எரிபொருள் விலையை உயர்த்தியது. இன்று இந்த நாட்டில் எண்ணெய் விலையை எமது அரசாங்கமோ அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ தீர்மானிக்கவில்லை.இலங்கையில் எண்ணெய் விலையை இந்தியாவின் ஐ.ஓ.சி தீர்மானிக்கின்றன. இந்தியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று மின்சாரதுறை கூறுகிறார்.குறைந்த விலையிலா கூடிய விலையிலா என்று அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறோம்.அது மாத்திரமன்றி ஜனாதிபதி,பொற்றோலியத் துறை அமைச்சர் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை போன்றவர்கள் பெய்ல் என்று நான் நினைக்கிறேன்.

மின்சாரம் துண்டிக்கப்படுவது மக்களின் நலனுக்காக அல்ல.நுரோச்சோலை யுகதானவி மின் உற்பத்தி நிலையங்களின் உரிமங்களை, மக்களின் உரிமைகளைப் பறித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.எண்ணெய் விலை இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகிறது.இந் நாடு அரசின் கட்டுப்பாடு இல்லாத நாடாக மாறிவிட்டது. இந்த அரசாங்கத்தால் இன்று கடன் நெருக்கடியை தீர்க்க முடியவில்லை. 1.2 பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் பிச்சை எடுக்க அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்கிறது.பாகிஸ்தானிடம் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கேட்கிறது. வங்காளதேசிடமிருந்து மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற முயற்சிக்கிறது.ஆனால் இன்று கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து பணம் தராத சூழ்நிலைக்கு நம் நாடு வக்குரோத்தடைந்து விட்டது. அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது கறுப்புப் பணத்தை எடுக்க வேண்டும் என்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.யாருடைய கறுப்புப் பணத்தை சொல்கிறார்? சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் வடகொரியாவிடம் கறுப்புப் பணத்தில் ஆயுதங்களை வாங்கினோம் என்றார்.கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த நாட்டில் சட்டம் இல்லை. சர்வதேச தடைகள் இல்லாமல் வர்த்தகம் செய்ய இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.சர்வதேச அளவில் சர்வதேச சமவாயங்களுக்கு உடன்பட்டிருக்குறோம். நாங்கள் இதற்கு எதிர்க்கிறோம் ஆனால் இவர்கள் வடகொரியாவில் இருந்து கருப்பு பணத்தை கையாள்கின்றனர்.ஆபிரிக்க நாடுகளில் கருப்புப் பணம் இருப்பது எங்களுக்குத் தெரியும்.ஆனால் யாருடைது என்பது தெரியாது,அது யாருக்கும் சொந்தமானது அல்ல, இந்த கருப்புப் பணம் இந்த நாட்டிலிருந்து திருடப்பட்ட பணம் என்று கூறப்படுகிறது. இன்று நாடு இப்படி வங்குரோத்து நிலையில் உள்ளது.ராஜபக்ஷக்கள் இந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை.ஒரு நாட்டை ஆளவே ஒரு அரசாங்கம் நியமிக்கப்படுகிறது. இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது மற்றும் பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் இல்லை.மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டமும் இல்லை. நாளைக்குள்,எல்என்ஜி விநியோகமும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும்போது,மின் உற்ப்பத்தி ஆற்றல் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இந் நாட்டு மக்களை துன்புறுத்தாமல் செய்ய முடியாவிட்டால் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் அச்சம் அரசாங்கம் இந்த வாரம் மாகாண சபை திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளது.ஏன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை என்று இந்த மக்களிடம் கேட்கிறோம்.மக்களின் விருப்பத்தை அறிய குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். எமது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன. தயவு செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.அதற்கு நாம் எப்பொழுது தயாராக இருக்கிறோம், அப்போதெல்லாம் இந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு பதில் சொல்வார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க திருடியதற்காகவோ, கொலைசெய்ததற்காகவோ அல்லது ஏதேனும் தவறு செய்ததற்காகவோ சிறையில் அடைக்க வில்லை.அவர் நீதிக்காக பேச போனார், ஆனால் இந்த நாட்களில் திருடியவர்களை நீதிமன்றம் விடுதலை செய்கிறது.வாரம் வாரம் தினம் தினம் இந்த நாட்டிலிருந்து பல்லாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்த அரசியல்வாதிகள்,அரசாங்க தலைவர்கள் தினம் தினம் விடுவிக்கப்படுகிறார்கள்.ஆனால் ரஞ்சன் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். ரஞ்சன் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

எங்கள் அரசாங்கத்தில் சில முன்னாள் பங்குதாரர்கள் குற்றவாளிகளை சிறையில் அடைக்க முயன்றது எனக்கு நினைவிருக்கிறது.நான் அமைச்சராக இருக்கும் போது ராஜபக்சக்களுக்கு எதிராக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படாது என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.பின்னர் அந்த அமைச்சர் சென்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்.இப்போது அரசாங்கத்தின் மீது கோபமடைந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.



அத்தகையவர்கள் எமது அரசாங்கத்தில் இருந்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளின் குண்டர்களுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக சிலர் கூறுகினார்கள் என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post