Top News

இம்ரான் கானை சந்தித்த பில்கேட்ஸ் : ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது வழங்கி கௌரவிப்பு




முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சென்ற பில்கேட்ஸ் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார்.


உலகப்புகழ் பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் (17) பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார். பில்கேட்சுக்கு இம்ரான் கான் மதிய விருந்து அளித்து கௌரவித்தார்.


பில் கேட்ஸ், வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது வழங்கி அந்த நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மத்திய அமைச்சர்களும், பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


இம்ரான் கான் அழைப்பின் பேரிலேயே பில்கேட்ஸ் பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post