முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கடன், பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

ADMIN
0

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.


உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களுடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறினார்.


இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top