சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு பிரஜை : விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள சிறப்பு பொலிஸ் குழு

ADMIN
0

வெள்ளவத்தை கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக மீட்கப்பட்ட மாலைதீவு இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மாலைத்தீவு பொலிஸாரின் சிறப்பு விசாரணைக் குழுவொன்று நேற்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிய முடிகிறது.


கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை  சடலமாக மீட்கப்பட்ட 23 வயதான அப்ஹாம் நசீம் எனும் இந்த மாலைத் தீவு பிரஜையின் மரணம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரும் கொழும்பு தெற்கு  வலய குற்ற விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மாலைத்தீவு சிறப்பு பொலிஸ் குழுவொன்று அந் நாட்டின் பொலிஸ்  மா அதிபரால் அனுப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top