ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு இன்று (14) காலை வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (14) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேனில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சாமுதிதாவின் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment