Top News

லொறியுடன் மோதி பஸ் விபத்து - ஐவருக்கு காயம்




திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (R)


Post a Comment

Previous Post Next Post