துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினர் கொலை

ADMIN
0


மொரட்டுவ - மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் போதைப்பொருள் வியாபாயான 26 வயதுடைய Abba என்றழைக்கப்படும் சமீர சம்பத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் இறந்தவர்,டுபாயில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் "பானந்துறை சலிந்து"என்ற நபருக்கு நெருக்கமான ஒருவரென தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top