இலங்கைக்கு நாளை(19) இரண்டு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு கப்பல்களிலும் டீசல் மற்றும் பெற்றோல் இருந்ததாகவும் எரிபொருளை விடுவிக்க சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (18) எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனவும், சுமார் மூன்று நாட்களாக எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே எரிபொருளின் விலை அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விநியோகிக்கப்படவில்லை எனவும் நுகர்வோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.