மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மருந்து இறக்குமதியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையானது மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சுடன் இணைந்து 2021 ஒகஸ்டில் மருந்துகளின் விலையை 9% உயர்த்த அனுமதி வழங்கியது.
இருப்பினும், அது அமெரிக்க டொலரின் மதிப்பு 176 ரூபாயாக இருந்த காலகட்டம் என்றும் இப்போது டொலர் மதிப்பு ரூ. 230 என்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment