பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

ADMIN
0





பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.




பயங்கரவாதத்திற்கான புதிய வரைவிலக்கணத்துடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக, இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்திருந்தது.




நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் பயங்கரவாதம் தொடர்பிலான விடயங்களை விசாரிக்க

வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top