Top News

மீண்டும் தலை தூக்கும் 'வெள்ளை வான்


இலங்கையில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்குவது தொடர்பில் கொழும்பு ஆயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை  சிறில் காமினி பெர்னாண்டோ கவலை தெரிவித்தார். 


சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரம தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இன்று (14) தெரிவித்தார்.


இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு சற்று முன்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்  என்று அவர் கூறினார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பிரச்சாரம் செய்த ஒருவர் கைது செய்யப்படுவதும், மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க ஊடகங்களைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார்

Post a Comment

Previous Post Next Post