Top News

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைப்பு’






1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.




நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.




இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான உறுதிமொழிகள் சட்டமூலத்தில் பரிசீலிக்கப்படுமா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.




அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை சுமந்திரன் முன்வைத்தார்.


Post a Comment

Previous Post Next Post