Top News

பெசிலுக்காக கொளுத்திய பட்டாசு பற்றைக்காட்டை எரித்தது




குருநாகலில் புதிய மூன்று மாடி பிரதேச சபைக் கட்டிடத்தின் திறப்பு விழா நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நேற்று (02)இடம்பெற்றது.

அவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களை வரவேற்கும் வகையில், பிரதேச சபைக் கட்டிடத்துக்கு அண்மையில் உள்ள பற்றைக்காட்டுக்கு அருகில் வைத்து பட்டாசு கொளுத்தப்பட்டது.

படபடவென வெடித்த பட்டாசுகளில் இருந்து பறந்த தீப்பொறிகள், பற்றைக்காட்டை கொளுத்திவிட்டது. அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியை அடுத்து, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post