இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49ஆவது அமர்வு இம்மாதம் 28ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள அறிக்கை மார்ச் மாதம் 3ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.
அதன் பிரதியொன்று நேற்று வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பதிலளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment