(சப்னி அகமட்)
எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்து வரும் மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எத்தனை வேலைப்பளுகள் இருந்தாலும். மாதத்தில் 02/3 வாரம் மக்கள் சந்திப்புக்களை கட்டாயம் மேற்கொண்டு வருவது வழக்கமாக்கிக்கொள்வார்.
அமைச்சராக இருந்தா காலத்திலும் சரி, இப்போதைய கட்சிக்காலத்திலும் சரி தனது மக்களை தொடர்ந்தும் சந்தித்துவரும் பழக்கத்தை அவர் எப்போதும் கொண்டவராவார். அந்த மக்களின் குறை நிறைகளை நேரில் சந்தித்து தீர்த்துக்கொள்ளும் பழத்தை மிக சிறப்பாக மேற்கொள்ளும் அரசியல்வாதியாவார்.
குறிப்பாக இந்த ஆட்சி வந்த பின் 2 தடவைகள் அநியாயமாக சிறைப்படுத்தப்பட்ட காலத்தில், தனது மக்களை சந்திக்கும் நிலையில் அவராக கடந்த ஒருவருடம் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் சிறையில் இருந்த வெளிய வந்த ரிஷாத் பதியுதீனை பார்ப்பதற்காக நாடு முழுவதுமுள்ள மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தவகையில் ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களும் மக்களை அந்த ஊர்களே சென்று சந்திக்கும் நிகழ்வுகளை கடந்த 03 மாதங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றார். ஆனால் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கான அமோக வரவேற்பு காத்துக்கொண்டே இருக்கிறது. அவரை சந்திக்கும் மக்கள் எவரும் அவரிடமிருந்து எந்த இலாபங்களை எதிர்பார்க்காமல், அன்பை மாத்திரமே எதிர்பார்க்கின்றார்கள், நன்றி விசுவாசமாக இன்னும் மக்கள் இருக்கின்றார். தலைமையை நேசிக்கும் உண்மையான மக்களை பார்க்ககூடியதாக இருக்கின்றது.
ரிஷாய் பதியுதீனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுத்த மக்கள், நோன்பு நோற்ற, பிராத்தனை செய்த மக்கள் அவரை கண்டதும் கண்ணீர் வடிக்கின்றார்கள். அதுவே எம் அவரின் வெற்றியாகும் .
கடந்த காலங்களில், மேல், வடக்கு, கிழக்கு, மத்திய, வடமேல், தென் மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட விஜயம் அனைத்திலும் அவருக்கு பின்னால் மக்களை புடைசூடியது அவரின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையும், வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என இன வேறுபாடுகளுக்கு அப்பால் அவருக்கான விஷேட பிராத்தனைகளும், மக்களின் ஆதவரவு கிடைப்பது விஷேட அம்சமாகும்.
Post a Comment