இந்தியாவுக்கு மீண்டும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் பசில்!

ADMIN
0


நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.


அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.


நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top