ஐ.தே.க முன்னாள் எம்.பியுடன் மைத்திரி சந்திப்பு
February 22, 2022
0
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், வடக்குக்கு விஜயம் செய்து பல்வேறான நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையிலேயே, விஜயகலாவின் வீட்டுக்குச் சென்று, நலன் விசாரித்துள்ளார்.
Share to other apps