Top News

உள்நாட்டு அரிசியின் விற்பனையில் வீழ்ச்சி






வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக, உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், இறக்குமதி அரிசியினையே நுகர்வோர் அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார்.




இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Post a Comment

Previous Post Next Post