Top News

’பொதுமக்களுக்கு பால்மா போதை’ திலும் அமுனுகம






பால்மாவில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பால்மாவைப் பயன்படுத்துவது ஒரு போதையாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

பால்மாவிலுள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்து பொதுமக்கள் அறிந்தால் பால்மா பொதிகளை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் குறையும் எனவும் பொதுமக்களுக்கு திரவப் பாலில் பல தெரிவுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

பல மாற்று வழிகள் இருக்கும் போது, பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றஞ்சுமத்தி மக்கள் வரிசையில் நிற்பது குறித்து ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் எவையாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதில் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான தீர்மானங்களை மக்கள் விரும்பமாட்டார்கள் எனவும், தற்காலிகமாக அவை பிரபலமடையாது எனவும் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தீர்மானங்களின் பின்னணியில் உள்ள காரணங்களை எதிர்காலத்தில் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post