சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது சதொச விற்பனை நிலையங்களில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 108 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 128 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள் மற்றும் தேங்காய் ஆகியவை குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும், ஆனால் குறிப்பிட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கொள்முதல் செய்வதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றன.
Post a Comment