எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக இன்று பிற்பகல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
பால்மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான தீர்வுகளை வழங்க ஜனாதிபதியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment