விகாரைகளில் கொள்ளையிடும் தம்பதியர் கைது
February 17, 2022
0
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில் அநுராதபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த தம்பதியினர் புத்தளம் - ஆண்டியாகம பகுதியில் வைத்து நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் உடுபந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணும், 22 வயதுடைய இளைஞனும் திருமணம் முடித்த தம்பதியினர் எனக் கூறப்படுகிறது.
இந்த தம்பியினர், பௌத்த விகாரைகளுக்குச் சென்று அங்கு கடமைபுரியும் பௌத்த மதகுரு மற்றும் பௌத்த விகாரையில் உபகாரம் புரியும் மதகுருக்களை இலக்கு வைத்து அவர்களுடன் நெருக்கமாகப் பழிக கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 1 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
Share to other apps