Top News

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை - ஜோன்ஸ்டன்




நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் தெரிவித்தார்.

பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகளால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கோவிட் காரணமாக எதுவும் செய்ய முடியாது என்று தலைமறைவாகும் அரசாங்கம் நாமல்ல. மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி, எத்தனை தடைகள், பொருளாதார பிரச்சினைகள் வந்தாலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நிறுத்த நாங்கள் தயாராக இல்லை. இன்னும் சில மாதங்களில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் பட்டினிச் சாவு இல்லை. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமீபகாலமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எந்த வாகனமும் குறைவாக ஓடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?

ஒன்றரை வருடங்களாக வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது மக்களுக்குத் தெரியும். அப்போது சாதிக்க முடியாத நாட்டின் பொருளாதாரத்தையும், தமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்த மக்கள் தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்த பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post