படல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமுற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மத வழிபாடுகளின் போது சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுவனின் உயிர் மீட்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன் பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்படவுள்ளது.
படல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment