Top News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசாங்கத்தை இனியும் நம்ப முடியாது - மல்கம் ரஞ்சித்



தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சட்ட அமைப்பை அரசாங்கம் கேலி செய்வதாக குற்றம் சாட்டினார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே கர்தினால் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்தும் தடுக்க முடியாத அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய பாதுகாப்பு தொடர்பில் கர்தினால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், வேறு அரசாங்கத்தின் கீழ் இருந்தாலும் நீதி கிடைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post