கொக்மாதுவ, வெலிகம பிரதேசத்தில் தேரர் ஒருவருக்காக போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுத வந்திருந்ததாக தெரிவிக்கப்படும், இன்னுமொரு தேரர் புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியாலயத்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கைதுசெய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
புத்தளம் சாந்த மரியா தமிழ் வித்தியத்திலுள்ள பரீட்சை நிலையத்தில் நான்காவது நாளாக க.பொ.த. உளர் தரப் பரீட்சை சிங்கள பாடத்துக்காக இரண்டாம் பிரிவு வினா தாளுக்க விடை எழுதுவதற்காக வருகை தந்திருந்த குறித்த தேரர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிப்படையில் அவர் பரீட்சை நிலைய தலைவரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளாா்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தேரர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். மஹஹீல்ல இசுருபுர பொலிஹத்த பிரதேசத்திலுள்ள விகாரையின் தேரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தேரரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் புத்தளம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.
Post a Comment