Top News

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு



ஜப்பானில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக இதுவரை இல்லாத அளவிற்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.


ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021 இல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.


இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை அடிக்கடி ஆய்வு செய்ய முடியாத நிலையும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


2021 ஐல் குழந்தைகளுக்கு எதிராக துன்புறுத்தல் வழக்குகள் 1.7 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


இதில் உணர்வுப்பூர்வமான தாக்குதல் தொடர்பாக 80,299 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 19,185 வழக்குகள் உடல் தொடர்பான தாக்குதல் காரணமாக பதியப்பட்டுள்ளன. குறைபாடு என 8270 வழக்குகளும், பாலியல் தொந்தரவு காரணமாக 296 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post