இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அபராதம் செலுத்தாமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தண்டனையில் அரைவாசி அல்லது அதற்கு மேல் அனுபவித்தவர்களே இவ்வாறு ஜனாதிபதியின் பொதுமன்னிக்கின் கீழ் விடுதலையாகியுள்ளனர்.
அத்துடன் 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மஹர சிறையிலுருந்து 20 பேரும் கேகாலை சிறைச்சாலையிலிருந்து 18 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 17 பேரும் களுத்துறை சிறைச்சாலையிலிருந்தும் 13 பேரும் போகம்பரா சிறைச்சாலையிலிருந்து 11 பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 11 பேரும் வாரியப்பொல சிறைச்சாலை யில் இருந்து 10 பேரும் இவ்வாறு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment