இன்று முதல் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பகலில் இயக்கப்படவுள்ள பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்று கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை முன்னெடுக்கவும் இயலாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment