கீவ் நகரில் ஊரடங்கு : உக்ரைனுக்கு உலக வங்கியின் அறிவிப்பு

ADMIN
0

ரஷ்யாவின் படையெடுப்பால் கடும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு உலக வங்கி முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.


அதன்படி உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.


இந்த உத்தரவின் காரணமாக பொது போக்குவரத்து இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ நிலையங்களை தங்குமிடங்களாக பொது மக்கள் 24 மணிநேரமும் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top