நாட்டில் இன்றைய தினம் மேலும் 1137 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 612,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,473 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 417 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 578,849 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.
Post a Comment