பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"குடும்பத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவும் 25 ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்துவிட்டார். அவரும் விடைபெற வேண்டும்.
இவ்விருவரும் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர். அதேபோல் குறைபாடுகளும் உள்ளன. அதேபோல் இருவருக்கும் இடையில் மாறுபட்ட திறமைகள் உள்ளன" - என்றார். (K)
Post a Comment