Top News

முஸ்லிம் மாணவிகள் 'பர்தா’ அணிந்து கல்லுாரிக்கு வருவதை தடை விதித்ததால் ஆர்ப்பாட்டம். #கர்நாடகா #இந்தியா



முஸ்லிம் மாணவிகள், கல்லுாரிக்கு ‘பர்தா’ அணிந்து வரும்
விவகாரத்தால் கர்நாடகா மாநிலத்தில் சிறு பதற்ற ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.




இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், பர்தா அணிந்து வந்த ஆறு முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்கு செல்ல கல்லுாரி நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.






இந்த விவகாரம் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் எதிரொலித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லுாரிக்கு வரத் ஆரம்பித்துள்ளனா். மாணவர்களுக்கு ஆதரவாக, இந்து மாணவிகளும் காவி துண்டுகளை அணிந்து வந்துள்ளனா்.



தலித் மாணவ – மாணவியர் நீல நிற துண்டை தோளில் அணிந்து வந்துள்ளனா். இந்த சம்பவம் கர்நாடகா கல்லுாரிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. இந்நிலையில், உடுப்பி, குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லுாரியை சேர்ந்த முஸ்லிம் மாணவியர் நேற்றும் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வருகை தந்துள்ளனா்.




இவர்களை உள்ளே அனுமதிக்க கல்லுாரி நிர்வாகம் மறுத்துள்ளது. அவர்கள் கல்லுாரி வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, அந்த மாணவிகள் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு கல்லுாரிகளில் இந்த விவகாரம் தொடர்பாக பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம் அந்த கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. .





இந்நிலையில், பர்தா விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவியர் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


கர்நாடகாவின் உடுப்பி குந்தாபூர் அரசு கல்லுாரி வாயிலில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்தும், இந்து மாணவ – மாணவிகள் காவி துண்டு அணிந்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது

Post a Comment

Previous Post Next Post